நேற்று மாலை சிலாபம் கொஸ்வத்தை பகுதியிலுள்ள விஹாரை
ஒன்றில் சிறுவன் ஒருவனை தாக்கியதாக சந்தேகத்தின் சந்தேகத்தின் பேரில்
இரண்டு பிக்குகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு பிக்குகள் தன்னைத் தாக்குவதாக பிள்ளையொன்று அழுதுக்கொண்டே
அருகிலுள்ள வீடொன்றின் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் இதனை அடுத்து
குறித்த வீட்டு உரிமையாளர் சிறுவனை கொஸ்வத்தை பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைத்துள்ளதுடன் அந்த சிறுவன் தற்போது மாரவில வைத்தியசாலையில்
சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தாக்குதலுக்குள்ளான சிறுவன் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்
என்றும், சிறுவனின் தாய் வெளிநாடு சென்றுள்ளதால் தந்தை அவரை விஹாரையில்
ஒப்படைத்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணைகளின் பொழுது தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் சந்தேகத்தின் கைது செய்யப்பட்ட இரு பிக்குகளும் இன்றைய
தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment