Tuesday, April 16

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பம்கோரல்


vacantநாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆசிரியர் சேவையில் 3-1 தரத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
18-35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகைமைகளாக க.பொ.த. சாதாரண தரம் ஒரே தடவையில் 3 திறமைச் சித்திகளுடன் தாய்மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தலுடன், க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
அத்துடன் அங்கீகரிக்கப்பட் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் ஒன்றினை பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, ஆட்சேர்ப்பு, சேவை நிபந்தனைகள், பரீட்சை பிரவேசித்தல், பரீட்சாத்தியின் அடையாளங்கள், பரீட்சை முறை அல்லது பரீட்சை மொழி ஆகிய விபரங்களை பெற்றுக் கொள்வதற்கு ஏப்ரல் 12ஆம் திகதி வர்த்தமானியை பார்வையிடலாம்.

No comments:

Post a Comment