Thursday, April 4

மல்வத்து ஓய லேன் பள்ளிவாசல் விவகாரம் : மாற்று வீடுகள் தயார்

மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசைளையும் அதனை அண்மித்துள்ள பகுதியில் வசிக்கும் சிங்கள, முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்றுவதற்கான கால எல்லை நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த குடும்பங்களுக்கான மாற்று வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக அனுராதபுர பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரத்ன விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.

பள்ளிவாசல் மற்றும் அஹதியா பாடசாலை என்பன நடத்தப்பட்டுவந்த குறித்த மல்வத்து ஓய  டிக்ஷன் லேன் பள்ளிவாசல் மீது கடும்போக்காளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என  அனுராதபுர பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உளவுத்துறை தகவல்களை ஆதாரம் காட்டி நீதிமன்றத்துக்கு அறிவித்ததாக கூறப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

குறித்த பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசத்தை சுற்றி சுமார் 40 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்குரிய மாற்று வீடுகள் கட்டுகெலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அவை 7 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது. குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 31 ஆம் திகதி வரை குறித்த பிரதேசத்திலிருந்து மக்களையும் குறித்த அஹதியா பாடசாலையையும் அகற்றிக்கொள்ள கெடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அது நிறைவடைந்துள்ளதால் பொது பல சேனாவின் பெயரில் அதன் மீது தாக்குதல்  நடத்தப்படலாம் என நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தேன் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment