Wednesday, April 17

இலங்கை பூர்வீக இந்து நாடு, பூர்வீக சமயம் இந்து - யோகேஸ்வரன் எம்.பி. சொல்கிறார்


இலங்கை நாடு பூர்வீகத்தில் இந்து நாடாகும். இந்து மதம் இலங்கையின் பூர்வீக மதமாகும் என மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். 
'இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்'எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு  உயைராற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை நாட்டைப் பொருத்த வரையில் அதன் பூர்வீக மதம் இந்த மதமாகும்.ஏனெனில் இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்தது குபீரன் பின்னர் அவனது சகோதரன் இராவணன் ஆகும் என இதிஹாஸம் இந்து ந}ல் குறிப்பிடுகிறது.
அதன்பின்னர் பிம்பிசேனன்,இயக்கர் நாகர் ஆட்சி செய்தனர்.அதன் பின்னர் வடஇந்நியாவில் அவதாரம் செய்த ஆண்மீக வள்ளல் கௌதம புத்தர் இலங்கை நாட்டிற்கு விஜயம் செய்து முதன்முதலாக மஹியங்கனை பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஆட்சி செய்த இயக்கர்களை சுழற்காற்றினால் வீசிவிட்டு பிராவணர்களை குடியேற்றினார்.பின்னர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு யாழ்ப்பாணத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மகோதரன்,குலோதரன் உள்ளிட்ட இருவருக்கும் மாணிக்க ஆசனத்தை பெருவதில் ஏற்பட்ட சண்டையை சமாதானப்படுத்த விஜயம் செய்தார்.
பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை.அவர் பரிநிர்வாணமடைந்து 700கூட்டாலிகளுடன் இலங்கைக்கு விஜயன் அனுப்பபட்டான் என்ற வரலாற்றை பௌத்த ந}ல்களான மகா வம்சம்,சூள வம்சம்,தீப வம்சம் உள்ளிட்ட நூல்களும் இந்து ந}லான இதிஹாஸம் நூலும் குறிப்பிடுகின்றது.
இலங்கையின் பூர்விக மதமான இந்து மதத்தை பின்பற்றுகின்ற எம்மிடத்தில் இந்து ஆண்மீக செயற்பாடுகள்,இந்து ஒழுக்க விழுமியங்கள் அற்றுப்போயுள்ளன. இன்று இந்து மதத்தின் ஆண்மீகப் போதனைகள் எழுதப்பட்ட நூல்களைப் படித்து நிறைய மக்கள் இந்து மதத்தை தழுவிக் கொள்கின்றனர்.
வெள்ளையர்கள் வாழ்கின்ற அமெரிக்கா நாட்டில் நூற்றுக்கு 26வீதமானோர் இந்துக்களாக இருக்கின்றனர். இவ்வாறு உலகளாவிய ரீதியில் இந்து நூல்கள்,தத்துவங்கள் என்பவற்றைப் படித்து கனிசமான தொகையினர் இந்து மதத்தை தழுவுகின்றனர்.
ஆனால் நாங்கள் நவீன உபகரணங்களை சுயநலத்திற்காக உபயோகித்து விட்டு சமயத்திலிருந்தும் அதன் போதனைகளிலிருந்தும் விலகிச் செல்கின்றோம். அவ்வாறான செயற்பாடுகள் எமது மாணவர்களிடத்தில் வரக்கூடாது.
இந்து மாணவர்கள் தமது இந்து மதத்தினை சரியாக பின்பற்றி ஒழுக்கமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப இவ்வாறான பயிற்சி நெறியினை பயண்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று நாம் ஆடம்பரம் என சொல்லிக்கொண்டு ஆண்மீக செயற்பாடுகளை புறந்தள்ளிவிடுகின்றோம்.
ஆகவே எமது கலாசாரத்தையும் பண்பையும் பறிகொடுத்து விடாமல் சறந்த ஆண்மீகமுள்ள நற்பிரஜைகளாக நாமும் மாறி எமது சமூகத்தையும் மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ,இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment