இலங்கையில் அல் கைதா செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுவது பொய்யான
தகவலாகும் என்று தேசபற்றுள்ள தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது.கொழும்பில்
இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர மேற்படி தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில்
இலங்கையில் அல் கைதா , ஜிஹாத் அமைப்பு செயல்படுகிறது என்ற தகவல்
எமது நாட்டில் பிரச்சினை ஒன்றை தோற்றுவிக்கும் அரசியல் நோக்குடன்
தெரிவிக்கப்பட்டுள்ளது . அப்படி அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளத்தில்
எந்த உண்மையும் இல்லை என்று அவர் அமெரிக்க ஊடக தகவலை மறுத்துள்ளார் .
அதேவேளை இலங்கையில் அல் – கைதா மற்றும்
ஜிஹாத் போன்ற முஸ்லிம் பயங்கரவாத குழுக்கள் செயற்படுகின்றன. என பொது பல
சேனா தெரிவித்துள்ளது .
பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி
தேரர் மேலும் தெரிவித்துள்ள தகவலில் இது குறித்து அமெரிக்க ஊடகங்கள்
வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மையாகும்.நாம் தெரிவித்து வந்ததை தற்போது
அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது
எனவே அரசாங்கமும், பாதுகாப்பு தரப்புகளும்
உடனடியாக செயற்பட்டு உள்நாட்டில் இயங்கும் முஸ்லிம் பயங்கரவாத குழுக்களை
அடியோடு வேரறுக்க வேண்டும், இந்தக் குழுக்கள் பெரும்பாலும் கிழக்கு
மாகாணத்தை மையப்படுத்தியே செயற்படுகின்றன.
அரசாங்கம் இந்த விடயத்தில் காலம் கடத்துவது ஆபத்தானதாகும் என்று பொதுபல சேனாவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment