Monday, April 1

எல்பிடிய முஸ்லிம் வர்த்தகர்களை பல வந்தமாக வெளியேற்றுகிறது BBS


காலி, எல்பிடிய பகுதியில் இயங்கி வந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை நிர்ப்பந்தத்தைப் பிரயோகித்து வெளியேற்ற பொது பல சேனா முயற்சி செய்திருக்கிறது.
வருடா வருடம் புதுப்பிக்கப்படும் குத்தகை ஒப்பந்தத்தை இனி வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டாம் என சிங்கள உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ள பொது பல சேனா ஏறத்தாழ வெற்றியடைந்திருக்கும் நிலையே காணப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 29ம் திகதி பொது பல சேனா கூட்டத்தின் மூலம் கலவரங்கள் ஏற்படலாம் எனும் அச்சத்தால் மூடப்பட்டுள்ள இவ்வியாபார நிலையங்கள் இதுவரை முழுமையாகத் திறக்கப்படவில்லை என அறிய முடிகிறது.
“எல்பிடிய விடுதலை” என இதை பொது பல சேனா வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment