
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகம பிரதேசத்தில் அமைந்துள்ள
விகாரையொன்றில் ஆபாச வீடியா காட்சிகள் பார்வையிட்டு வந்த பிக்கு ஒருவரை
பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பிக்குவின் நடவடிக்கை தொடர்பாக
பேலியாகொடை பொலிஸ் நிலையத்துக்கு பொது மக்கள் வழங்கிய இரகசிய தகவலின்
அடிப்படையிலேயே அந்த பிக்கு கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து பல்வேறு
ஆபாச வீடியோ காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்கள் மற்றும் கணனிகளையும் பொலிஸார்
மீட்டுள்ளனர்.
திக்பிடியகொட
தலுகம பகுதி விகாரையொன்றில் இரகசியமாக பிக்குகள் ஆபாச வீடியோ படம்
பார்ப்பதாக பல முறைப்பாடுகள் பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த
விகாரையினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பொலிஸõரின்
சுற்றிவளைப்பின் போது கணனியுடன் இருந்த பிக்கு ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு
உட்படுத்தியதுடன் அவரிடமிருந்த கணனியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே
அவர் ஆபாச வீடியோ படம் பார்த்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட
பிக்குவை விசாரணைக்குட்படுத்திவரும் பேலியகொடை பொலிஸாõர் அவரை
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகம பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் ஆபாச வீடியா காட்சிகள் பார்வையிட்டு வந்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பிக்குவின் நடவடிக்கை தொடர்பாக பேலியாகொடை பொலிஸ் நிலையத்துக்கு பொது மக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அந்த பிக்கு கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து பல்வேறு ஆபாச வீடியோ காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்கள் மற்றும் கணனிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
திக்பிடியகொட தலுகம பகுதி விகாரையொன்றில் இரகசியமாக பிக்குகள் ஆபாச வீடியோ படம் பார்ப்பதாக பல முறைப்பாடுகள் பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த விகாரையினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பொலிஸõரின் சுற்றிவளைப்பின் போது கணனியுடன் இருந்த பிக்கு ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவரிடமிருந்த கணனியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர் ஆபாச வீடியோ படம் பார்த்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பிக்குவை விசாரணைக்குட்படுத்திவரும் பேலியகொடை பொலிஸாõர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment