கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த தேசிய ஐக்கிய
முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி இன்று கொழும்பு மஜிஸ்திரேட்
நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை சட்டத்தரணிகள் சகிதம் அசாத் சாலி நீதிமன்றில் ஆஜரானார். அசாத்
சாலி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரை 1
மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான்
அனுமதித்தார்.
இதனையடுத்து சுமார் ஒரு வாரங்களுக்குப் பின்னர் அசாத் சாலி மீண்டும்
இன்று தனது அலுவலகத்திற்குத் திரும்பி கடமைகளை மேற்கொண்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment