Thursday, March 28

சவூதிக்கான புதிய தூதுவர் வீ.கிருஷ்ணமூர்த்தி கடமைகளை பொறுப்பேற்கிறார்



சவூதி அரேபியாவிற்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட வீ.கிருஷ்ணமூர்த்தி அடுத்த மாத நடுப்பகுதியில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

சிரேஷ்ட இராஜதந்திரியான வீ.கிருஷ்ணமூர்த்தியின் பெயர் சவூதி அரேபியாவிற்கான புதிய தூதுவராக கடந்த மாதம் முன்மொழியப்பட்டது.

எவ்வாறாயினும் தற்போது இவரின் நியமனம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பிலான நியமன கடிதமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடமைகளை பொறுப்பேற்பதற்காக அடுத்த மாத நடுப்குதியில் கிருஷ்ணமூர்த்தி சவூதி அரேபியா செல்லவுள்ளார். சிரேஷ்ட இராஜதந்திரி வீ.கிருஷ்ணமூர்த்தி தற்போது வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய நாடுகளுக்கான பிரிவின் பணிப்பாளர் நாயகமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பணிப்பெண் ரிசானா நபீகிற்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை அடுத்து சவூதி அரேபியாவிற்கான தூதுவராக கடமையாற்றிய அஹமட் ஜவாத்தின் கடந்த ஜனவரி மாதம் மீள அழைக்கப்பட்டார்.இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மலேசியாவிற்கான புதிய உயர் ஸ்தானிகராக ஐ. அன்சார் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றுகின்றார்.

சிரேஷ்ட இராஜதந்திரியான இவர், முன்னர் எகிப்து மற்றும் சவூதி அரேபியா உட்பட பல நாடுகளின் தூதுவர்களாக கடமையாற்றியுள்ளார்.

மலேசியாவிற்கான உயர் ஸ்தானிகராக கடமையாற்றிய மூத்த இராஜதந்திரியான கல்யானந்த கொடகே அண்மையில் திருப்பி அழைக்கப்பட்டர். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment