Monday, March 25

பன்றிக் கொட்டிலில் மாணவர்கள் : பாஸ்டர் கைது

திஸ்ஸமஹராம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போகஹபெலஸ்ஸ பிரதேசத்தில் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில் சிறுவர்களை  பன்றி மற்றும் கோழி போன்ற பிராணிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தி வந்ததாக  கூறப்படும் சம்பவம்  தொடர்பில் பாஸ்டர் ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து கே.இ.தயாரத்ன எனப்படும் குறித்த பாஸ்டரை கைது செய்யும் பொருட்டு அவரிடம் வாக்கு மூலமும் பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

திஸ்ஸமஹராம பொலிசாரின் உதவியுடன் குறித்த சிறுவர் இல்லத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இன்று முற்றுகையிட்டிருந்தனர்.

குறித்த அதிகார சபையின் அதிகாரிகள் வருகை தருவதை அறிந்த குறித்த பாஸ்டர் சிறுவர்களை வேறு இல்லமொன்றுக்கு அனுப்பி வைத்திருந்தாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக குறித்த சிறுவர் இல்லத்தில் பன்றி கொட்டிலில் சிறுவர்கள் தங்கவைக்கப்படுவதுடன் பன்றிகளை வெட்டுவதற்கும் அவர்களே பயன்படுத்தப்படுவதாக இன்றைய பிரதான சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டது.

இது தொடர்பிலான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்திருந்த அப்பத்திரிகை குறித்த பிரதேச மக்களின் கருத்துக்களையும் கோடிட்டு காட்டியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment