Monday, March 25

இஸ்லாத்திலும் பௌத்தத்திலும் அடிப்படைவாதங்கள் இல்லை : அஸ்வர்

 
இஸ்லாம் மதத்தில் அடிப்படைவாதம் கிடையாது, நடு நிலையை கடைபிடிக்குமாறே குர்-ஆன் போகின்றது. முஸ்லிம் மக்கள் ஒரு போது அடிப்படைவாதத்திற்குள் செல்ல மாட்டார்கள். பௌத்த மதத்திலும் நடு நிலை குறித்து கூறப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற அனைத்து இனங்களுக்கான ஐக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இஸ்லாம் மற்றும் பௌத்த மதங்களில் அடிப்பவடைவாதங்கள் இல்லை. சில நபர்களின் தவறுகளை தவிர வேறு எதுவுமில்லை. முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கையடக்க தொலைபேசிகளில் செய்திகளை அனுப்பும் சக்திகள் உள்ளன.

அவ்வாறான செய்தி ஒன்றில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நான் கடவுளாக வணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மதத்தின் தூஷிக்கும் நடவடிக்கையாகும். எவர் எந்தளவுக்கு முன்னோடியாக இருந்தாலும் முஸ்லிம்கள் அவரை கடவுளாக கருத மாட்டார்கள். அல்லாவை தவிர வேறு எவரையும் முஸ்லிம்கள் வணக்க மாட்டார்கள் எனவும் அஸ்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment