சர்ச்சைகளுக்கு
மத்தியில் ஆரம்பமாகவுள்ள IPL போட்டிகள் குறித்து இந்திய ஊடகமான NDTVயுடனான
விசேட செவ்வியொன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து
வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இந்தியாவின் சில பகுதிகளில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகளில் எமது
வீரர்களுக்கு அனுமதி கிடைக்காமை வேதனைக்குரிய விடயமாகும் என முரளிதரன்
இதன்போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
'இலங்கை கிரிக்கெட் அணியில் 20 வருடங்கள் விளையாடியுள்ளேன். தமிழன்
என்பதற்காக எந்தவொரு பிரச்சினையும் எனக்கு இருக்கவில்லை. கிரிக்கெட் சபை,
அரசாங்கம் மற்றும் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். போர்
முடிவடைந்து தற்போது மக்கள் சமாதானத்துடன் வாழ்கின்றனர். கடந்தகாலம்
கடந்துவிட்டது. அவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் வரக்கூடாதென
விரும்புகின்றோம்,' என்றார் முத்தையா முரளிதரன்.
No comments:
Post a Comment