from: காத்தான்குடி இன்போ
இன்று 25.03.2013 திங்கள் காலையில் இருந்து ஏறாவூர் நகர் முழுக் கடையடைப்பால் வெறிச்சோடியிருக்கின்றது.
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது
மேற்கொள்ளப்பட்டு வரும் அவஸ்தைக்குள்ளாக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளைக்
கண்டித்து நாடளாவிய ரீதியில் அமைதியான சாத்வீக கடையடைப்புப்
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இந்த ஹர்த்தால்
இடம்பெறுகின்றது.
இதேவேளை ஹர்த்தால் கடையடைப்பை இன்று
மேற்கொள்ள வேண்டாம் என நேற்றிரவு முதல் அடிக்கடி பள்ளிவாசல்
ஒலிபெருக்கிகளிலும் ஏனைய குறுஞ்செய்திச் சேவைகளுக்கூடாகவும் தகவல்கள்
கூறப்பட்டிருந்தபோதும் அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு முழுமையான ஹர்த்தால்
இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது அடக்கு முறைக்குள்ளாகும் ஒரு
ஒட்டுமொத்த சமூகத்தின் சாத்வீக, உணர்வு ரீதியான வெளிப்பாடு என்று
கடையடைப்பில் ஈடுபட்டுள்ள தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு
வர்த்தக சமூகப் பிரதிநிதி கூறினார்.
இதேவேளை தவணைப் பரீட்சை காரணமாக பாடசாலைகள் வழமைபோன்று இயங்குகின்றன.
No comments:
Post a Comment