Monday, March 25

அமெரிக்காவின் எச்சரிக்கையால் அடிபணிந்தது அரசு: ஜெனிவா தீர்மானங்களை நிறைவேற்ற இணக்கம்!

News Service

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிர்ப்பந்தங்களுக்கும் அழுத்தங்களுக்கும் அரசு அடிபணிந்து விடாது என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசுக்குக் கால அவகாசம் தேவை. எனினும் 2014இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறுவதற்கு முன்னர் இந்நிறைவேற்றம் சாத்தியப்பட்டுவிடும் என தான் நம்புகிறார் என்றும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில், இலங்கை மீது சர்வதேச ரீதியிலான நடவடிக்கை எடுக்க நேரிடும் என கடந்தவாரம் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, இலங்கை சர்வதேச சமூகத்தின் சொல்லுக்குச் செவிமடுக்க வேண்டும். இதுவரை தன்னால் நிறைவேற்றப்படாத திட்டத்தையும் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்க வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார். ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எய்லின் சேம்பர் லெய்ன் டொனாஹே இது குறித்து குறிப்பிடுகையில், "இலங்கை மக்களுக்காக, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்ற ஓர் ஆவணமாக இத் தீர்மானத்தை நோக்க வேண்டும். இது இலங்கை அரசை ஊக்குவிப்பதற்கான தீர்மானமாகும்"' எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கப்பாடும் நிலவ வேண்டும். அத்துடன் உண்மையான பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை மேற்கொள்ள அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment