Monday, March 25

பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் சிலை - ஜனாதிபதி திறந்துவைப்பு (வீடியோ)


பொத்துவில் மண்மலைக்கருகில் உள்ள முஹூது மஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலையை சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதி திறந்துள்ளார்.
உள்ளூர், வெளியூர் உல்லாசப் பிரயாணிகளுக்கு பிரசித்தமான, பொத்துவிலில் அமைந்துள்ள மண்மலைக்கருகில் தெற்குப் புறமாக அமைந்துள்ள தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தின் கிளைப் பாடசாலை, அலிப் அல்பபெற்றிகல் கெம்பஸ், மதுரஞ்சேனை முன்பள்ளிப் பாடசாலை ஆகியவற்றுக்கருகில் புதிதாக புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
முஹூது மஹா விகாரையோடு இணைந்து தொல்பொருள் திணைக்களத்து ஆய்வு நிலையமும் அமைந்துள்ளது. பொத்துவில் பிரதான வீதியிலிருந்து அறுகம்பைக்குச் செல்லும் வீதியில் கிழக்குப் புறமாக மத்ரசதுல் ஷபீலுர் றஷாத் அரபுக் கல்லூரி வீதியினூடாக 1.6 கிலோ மீற்றர் புதிய பாதையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment