Wednesday, March 20

முஸ்லிம்களுக்கெதிரான அநீதிகளை வண்மையாக கண்டிக்கிறோம் : மக்கள் சங்கம்

                                                     
முஸ்லிம் மக்களுக்கெதிரக தற்போது இடம் பெற்றுவரும் அநீதிகளை அகில இலங்கை மக்கள் சங்கம் வண்மையாக கண்டிக்கின்றது என அகில இலங்கை மக்கள் சங்கத்தின் தலைவர் வீரைய்யா சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பொதுபல சேனா எனும் சில பௌத்த தேரர்களின் செயற்பாடு இந்த நாட்டின் நிரந்தர அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
ஹலால் பிரச்சினை இந்த நாட்டில் ஒரு பெரும் பிரச்சினையாக மாறி தற்போது முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையாகவும் மாறி வரும் நிலை உருவாகியுள்ளது இதனால் முஸ்லிம்கள் இந்த நாட்டில் தற்போது அச்சத்துடன் காணப்படுகின்றனர். இது ஒரு ஆராக்கியமான விடயமல்ல என்பதை சம்பந்தப்பட்ட பொது பல சேனா எனும் அமைப்பு நன்கு விளங்கி கொள்ள வேண்டும்.
 
கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்ததுடன் இருப்பிடங்களையும் உடமைகளையும் பொருளாதாரத்தையும் இழந்துள்ளனர்.
இதே போன்று இந்த யுத்தத்தினால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு மதத்தின் பெயரினால் அநீதி இழைக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். எமது சகோதர சமூகமான முஸ்லிம்களுக்கெதிரக இடம் பெற்றுவரும் அநீதிகள் தொடர்பில் நாம் வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதுடன் எந்த தருணத்திலும் இது விடயத்தில் முஸ்லிம்களுக்காக எமது அகில இலங்கை மக்கள் சங்கம் குரல் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.
இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தை விரும்பும் அரசாங்கம் இவ்வாறு மதங்களுக்கெதிரக கட்டவிழ்த்து விடும் அநீதியையும் அராஜகத்தை நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கெதிரக சட்ட நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் எமது அகில இலங்கை மக்கள் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment