உலமா சபை ஹலால் சான்றிதழை முற்றாக விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தால்
அது பேரினவாதிகளுக்கு பலத்த அடியாக விளங்கியிருக்கும். ஆனால் தற்போது
உள்நாட்டில் ஹலால் சான்றிதழ் இல்லை எனவும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதிகளுக்கு
மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளமையானது
ஏமாற்றமளிப்பதாக மேல் மாகாண சபை உறுப்பினர் அம்ஜாத் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறு குழுவினரின் கோரிக்கைக்காக இவ்வாறு ஒட்டுமொத்த முஸ்லிம்
சமூகத்தினதும் உரிமையை விட்டுக் கொடுப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள
முடியாது.
உலமா சபை இதுவிடயத்தில் நிதானமாக செயற்பட்டிருக்கலாம். அவசரப்படாது ஆழமாக
யோசித்து பல தரப்பினரதும் கருத்துக்களை அறிந்து ஒரு முடிவுக்கு
வந்திருக்கலாம்.
உலமா சபையின் இந்தத் தீர்மானத்தினால் மக்கள் மத்தியில் பாரிய குழப்ப நிலை
ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்தத் தீர்மானம் ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரை
திருப்திப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது எனவும் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment