" பலாங்கொடை, ஜெய்லானி க்கு ஏப்ரல் 31ம் திகதி வரை காலக்கேடு, அதற்குள்
அங்கிருந்து வெளியேற வேண்டும், இம்முறை வெசாக் தினத்தை அங்கு கொண்டாடுவோம்"
- கண்டி மாநாட்டில் பொதுபல சேனா.
இந்த செய்தியை பார்க்கும்போது, பொது பல சேனாவை நினைத்து பயப்படுவதை விட,எம் முஸ்லிம் சமூகம் இந்த விடையத்தில் இரண்டாக பிரியுமோ என்ற பயம் ஏற்படுகிறது. ஜெய்லானி விடையத்தில் முஸ்லிம் இயக்கங்களிடையேயும் மக்களிடையேயும் கருத்து வேறுபாடு உண்டு, ஆனால் அதை காட்டும் இடம் இந்த சந்தர்ப்பமல்ல. பொதுபலசெனா "கபுறு வணக்கம் கூடாது" என்றதற்காக இதை எதிர்க்கவில்லை, முஸ்லிம் களின் வரலாற்று சின்னங்கள் இருக்கக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம். எனவே இதை நாம், "முஸ்லிம்களுக்கு உரிய ஒரு பூமி பறிபோகக்கூடாது " என்ற ரீதியில் இந்த பிரச்சினையை அணுகுவோம்.ஒரு தௌஹீத் பள்ளி இடிக்கப்ப்படும்போதும், ஒரு ஜெய்லானி இடிக்கப்ப்படும்போதும், "முஸ்லிம்களின் சொத்து" என்ற ஒரே கொள்கையை கையாள்வோம். அது மார்க்கத்துக்கு சரியா, தவறா என்பதை நாம் நமக்குள் உரையாடுவோம், அதற்கான நேரம் இதுவல்ல. அதை விடுத்து "அல்லாஹ் இஸ்லாத்துக்கெதிரான இடங்களை, காபிர்களைக்கொண்டு அழிக்க வைக்கிறான் " என்ற கடந்தகால தப்பபிப்பிராயம் இந்த முறை எம்மிடம் வரக்கூடாது. பழையவற்றை மறப்போம்(இந்தியாவிலிருந்து பிரபல மார்க்க அறிஞர் இலங்கைக்கு பிரச்சாரம் செய்ய வந்தபோது, சிங்களவர்களை வைத்தே அவரை திருப்பி அனுப்பியது,அனுராதபுர புற சியாரம் இடிக்கப்பட்டபோது சிலர் மகிழ்ச்சி தெரிவித்தது, தெகிவளை தௌஹீத் பள்ளி தாக்கப்பட்டபோது சிலர் மகிழ்ச்சி தெரிவித்தது), ஒன்று படுவோம். இன்ஷா அல்லாஹ்

A. ஜலீல்
No comments:
Post a Comment