Friday, March 29

தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலுக்கும், கூரகலை விஹாரைக்கும் சமரச தீர்வு


பலாங்கொடை தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள நிலப்பரப்பில் பௌத்தர்களின் கூரகலை விஹாரை இருப்பதாகத் தெரிவிக்கப்படும் பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைப்பதற்கான உயர்மட்ட மகாநாடொன்று பாதுகாப்பு அமைச்சில் வியாழனன்று 28-03-2013 நடைபெற்றது.
பொதுபலசேனா தமது அடுத்த இலக்கு ஜெய்லானி எனவும் வெசாக் போயா தினத்தன்று அந்த இடத்திற்கு பல ஆயிரக்கணக்கானோருடன் அணி திரண்டு செல்வோம் என்று கூறியிருந்த பின்னணியிலே இப்பிரச்சினைக்கு சமரசமாகத் தீர்வு காணும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், கூரகலை விஹாரை பௌத்த பிக்குகள், ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகி மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இப்பிரச்சினையை சமரசமாகத் தீர்த்துவைப்பதற்கான பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாக முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளர் அஸ்கர்கான் தெரிவித்தார். அவை வருமாறு
1. முஸ்லிம்களுக்காக 22 எக்கர் காணியை ஒதுக்குதல்
 2. 54 ஏக்கர் காணியை எல்லோரும் பயன்படுத்தக்கூடிய வகையில் பொதுவாக ஒதுக்குதல்.
 3. நீதிமன்றத் தீர்ப்புப்படி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு கடைகளையும் ஒரு வாரத்துக்குள் அகற்றுதல், அந்த கடை உரிமையாளர்களுக்கு முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கடைகளை அமைத்துக் கொள்ள இடமளித்தல்.
 4. ஏப்ரல் மாதத்துக்குள் பள்ளிவாசல் சார்ந்ததாக அமைந்துள்ள ஒரு கட்டடத்தை அகற்றுதல்.
 5. இந்த இடத்தில் யாரும் தங்கி நிற்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
 6. சிவனொளிபாதமலை போன்று இந்த இடத்தை தரிசித்து விட்டு சமய வழிபாடுகளில் ஈடுபடச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இது தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் தருமாறு முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளைக் கேட்டுள்ளனர்.
இக்கூட்டம் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியான கபில ஹேவாவிதாரண தலைமையில் நடைபெற்றது. பலாங்கொட விஜயஜோதி தேரர் மற்றும் தெல்தோட்ட தம்மாபிடிய தேரர் ஆகியோரும் முஸ்லிம் கவுன்ஸில் சார்பில் செயலாளர் அஸ்கர்கான், மேல் மாகாண ஆளுநரின் அந்தரங்கச் செயலாளர் நகிப் மௌலான, உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். றியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment