இதன்பொருட்டு இன்று 07-03-2013 சற்றுநேரத்திற்கு முன் மூத்த முஸ்லிம் அமைச்சர் பௌஸியின்
வீட்டில் முஸ்லிம் அமைச்சர்கள் பௌஸி, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன், அதாவுல்லாஹ்
ஆகியோர் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டுள்ளதாக நம்பகரமான அரசியல்
வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
நேற்று புதன்கிழமை ரன்முத்து
ஹோட்டலில் முஸ்லிம் அரசியல்வாதிகள், ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் சமூகப்
பிரதிநிதிகள் ஒன்றுகூடி தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும்
நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாகவே முஸ்லிம்
விவகாரங்களில் ஒன்றுபட்டு செய்றபடுவதென முஸ்லிம் அமைச்சர்கள் உறுதிபூண்டு, இன்று வியாழக்கிழமை
மூத்த அமைச்சர் பௌஸின் வீட்டில் முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள், எட்டப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
இருந்தபோதும் தற்போதைய சூழ்நிலையில் அவற்றை பகிரங்கமாக்குவதிலிருந்தும் ஜப்னா
முஸ்லிம் இணையம் தவிர்ந்து கொள்கிறது.
அதேவேளை இவ்வாறான பொது விடயங்களிள்
உடன்பட்டு, அதற்காக உழைக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின்
சார்பின் நன்றி கூறுவதுடன், முஸ்லிம் அமைச்சர்களின் இவ்வாறான செயற்பாடு தொடர வேண்டுமெனவும்
வேண்டுகோள் விடுக்கிறோம்..!
from : jaffna muslim
No comments:
Post a Comment