Thursday, March 7

ரணில் எதிர் கட்சி என்று யார் சொன்னது ?: கெஹெலிய -





ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி என்று யார் சொன்னது என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கேள்வி எழுப்பினார்.

இன்று பிற்பகல் ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித்தலைவர் என மேற்கோள் காட்டி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றினை கேட்க முற்பட்ட போதே அமைச்சர் கெஹெலிய நகைச்சுவையாக அதனைத் தெரிவித்தார்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி இல்லை என தெரிவித்த அவர், அவ்வாறெனில் அவர் ஆளும் கட்சியா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு தெரியாது என பதிலளித்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment