இதில் கலந்துகொள்ளவுள்ள 115 கர்தினால்களும் வத்திக்கான் சென்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு கொழும்பு பேராயர் பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் வத்திக்கான் சென்றுள்ளார்.
வத்திக்கானிலுள்ள புனித பேதுரு தேவாலயத்தில் இன்று முற்பகல் விசேட ஆராதனைகள் இடம்பெற்று, மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
வாக்கெடுப்பின் பின்னர் வாக்குச் சீட்டுக்கள் எரிக்கப்படும். அதன்
பின்னர், அங்குள்ள புகைபோக்கி ஊடாக கறுப்பு புகை வெளியேற்றப்படுமானால்
புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என பொருள்படும். வெள்ளை
நிறத்திலான புகை வெளியேற்றப்படுமானால் பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டமை
உறுதிசெய்யப்படும்.
No comments:
Post a Comment