Monday, March 18

வெளிநாடுகளிலும் பொதுபல சேனா கிளை





வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் அழைப்பிற்கிணங்க எதிர்காலங்களில் அங்கு எமது கிளைகள்  நிறுவப்படும் என பொதுபல சேனாவின் தேசிய அமைப்பாளர் திலங்க விதானகே தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற பொதுபல செனாவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கம்பஹாவில் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு இறைச்சிக்கடை முதலாளி ஒருவரினூடாக மறைமகமாக போதைபொருள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வாசிரியர் பாதிக்கப்பட்டது பின்னர் வைத்தியர் மூலம் தெறிய வந்தது. எனவே நாம் அவர்களுடன் கவனமாக நடக்க வேண்டும். எங்கு சாப்பிடுவது என நாம் தீர்மானிக்க வேண்டும்.


நாங்கள் உங்களுக்கு பன்சலயில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் பள்ளியில் பிரித் ஓத இடம் தருவீர்களா என கேட்டால் வாய் திறக்கிறார்கள் இல்லை. இது தான் அவர்கள் கூறும் சக வாழ்வா???

முஸ்லிம்களில் மதகுருமார்கள் இல்லை. பள்ளி பராமரிப்பாளர்களே உள்ளனர். எமது மதகுருமார்களுக்கு சமமாக அவர்களை உட்காரவைக்க வேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை எமது மதகுருமார்கள் பகிஷ்கரிக்க வேண்டும்.

ஹலால் சர்வதேச சந்தைக்கு அவசியம் என சிலர் கூறுகின்றனர். சர்வதேச ரீதியில் முஸ்லிம்களை விட மற்றவர்கள் அதிகம். எனவே ஹலால் இனை விட ஹலால் அற்ற பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகம். எனவே எமக்கு ஹலால் தேவை இல்லை. ஹலால் அற்ற பொருட்களுக்கு சர்வதேச ரீதியில் நாம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றோம்.

No comments:

Post a Comment