Monday, March 18

வேற்றுமையில் ஒற்றுமை: தேசிய ஐக்கிய முன்னணியின் ஏற்பாட்டில் கருத்துக்களம்

NUA Meeting (9)


தேசிய ஐக்கிய முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு ஜய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று (17.03.2013) வேற்றுமையில் ஒற்றுமை எனும் கருத்துக்களம் நடைபெற்றது.
தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயருமான எம்.ஆசாத் சாலி தலைமையில் இந்த கருத்துக்களம் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கருஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஸ்ரீ ஜயவர்த்தணபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் தம்பிர அமிலதேரோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தென்மாகாண சபை உறப்பினருமான பத்தேகம சமித தேரோ, இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் ராஜா கொளுர, கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.முஸம்மில், கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன,முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் கல்விமான்கள், முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள், கட்சிகளின் தலைவர்கள் உலமாக்கள், சமய சமூக பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். (kattankudi.info)

No comments:

Post a Comment