Friday, March 29

கொழும்பில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நேற்றிரவு பெபிலியானவிலுள்ள பெஷன் பக் ஆடை விற்பனை நிலைய களஞ்சியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை முதல் கொழும்பிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பிரபல வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை முதல் தமது நிறுவனம் முன்பாக பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தக நிலைய முகாமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அச்சமுற்று வர்த்தக நிலையங்களை மூட வேண்டாம் எனவும் தேவையான பாதுகாப்பை தாம் வழங்குவோம் எனவும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிடடார்.
 
இதேவேளை, பெபிலியான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment