Thursday, March 7

புதிய போப் தேர்ந்தெடுக்கும் நடைமுறை ‘ரகசியம் காக்க’, செய்தியாளர்களுடன் பேச தடை!


புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் ரகசிய நடைமுறைகாப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக வாட்டிகனுடன் தொடர்புடைய அமெரிக்க கார்டினல்கள், “செய்தியாளர்களுடன் பேசவேண்டாம்என்று தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. வாட்டிகனால், அதி ரகசியம் காக்கப்படும் போப் தேர்வு, மீடியாக்கள் மூலம் வெளிவருவதை தடுக்கவே இந்த ஏற்பாடு.

இந்தவாரம், அமெரிக்க கார்டினல்கள் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினர். அப்போது, புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையில், தேர்தலின்போது தாம் யாருக்கு வாக்களிக்கப்போகிறோம் என்பது குறித்து விலாவாரியாக பேசியிருந்தனர். இது அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய பத்திரிகைகளில் முதல்பக்க செய்திகளாக வெளியாகியிருந்தன.

அதையடுத்தே, இந்த தடை.

அமெரிக்க கார்டினல்களின் செய்தி தொடர்பாளர் சிஸ்டர் மேரி ஆன் வால்ஷ், “சில ரகசியங்கள் வெளியாவதாக கருத்து ஒன்று கூறப்பட்டுள்ளது. அதையடுத்து, அமெரிக்க கார்டினல்கள் செய்தியாளர்களுடன் பேசுவதில்லை என தீர்மானம் எடுத்துள்ளோம்என்றார். வாட்டிகன் நிர்வாகத்திடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவில்லை.

வாட்டிகன் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர், “அமெரிக்கர்களை வாய் திறக்க வேண்டாம் என்று நாம் கூறவில்லை. அவர்கள்மீது எந்த அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. போப் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையின் ரகசியம் காக்க, அவர்களாகவே சுய கட்டுப்பாடு விதித்துக் கொண்டனர்என்றார்.

No comments:

Post a Comment