ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை
மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இரண்டு யானைக் குட்டிகளை கொடுத்து 510 மில்லியன்
டொலர்களை கடனாக பெற்றுக் கொண்டதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி
மேயர் அஸாத் சாலி தெரிவித்தார்.
அஸாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை
இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும்
தெரிவிக்கையில், தற்போது அரசிடம் நிதி இருப்புக் கிடையாது. நாட்டில் ஊழல்
மோசடி செய்து தனது பிழைப்பை நடத்திய அரசாங்கம் தற்போது மக்களை ஏமாற்றி
களியாட்டங்களை நடத்த சீனாவிடம் கடனுதவி கேட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு கடனுதவிகளை எம்மால்
தரமுடியாது ஏதேனும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மட்டும் தான் எம்மால்
கடனுதவி செய்யமுடியும் என சீனா மறுத்துவிட்டது.
இதையடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையிலேயே இங்கிருந்து இரு யானைக்
குட்டிகளை ஜப்பானிடம் கொடுத்து 510 மில்லியன் டொலர்களை கடனாகப்
பெற்றுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment