Tuesday, March 26

சவூதியில் இலவசமாக உணவு வழங்கும் ஹோட்டல்

சவூதிஅரேபியாவில் துருக்கியர் நடாத்தும் உணவகம் ஒன்றில் பசித்தவர்களுக்கு இலவசமாக வருடம் முழுவதும் உணவு வழங்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சராயா எனும் உணவகத்திலேயே இந்த இலவசத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த உணவகத்தின் முன்னால் தொங்கவிடப்பட்டுள்ள விளம்பரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது, உங்களிடம் பணமில்லை ஆனால் பசியாக இருக்குமானால் நாங்கள் உங்களுக்கு வருடம் முழுவதும் காலை, பகல் மற்றும் இரவு உணவளிக்கின்றோம்.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உணவை நீங்கள் பெற்றுக்கொள்ள பட்டனை அழுத்தி வெளியில் காத்திருங்கள். விரைவில் உங்களை உணவு வந்தடையும்.... பிரார்த்தனையின் போது மாத்திரம் எங்களை மறந்துவிடாதீர்கள்.

இவ்வாறு செயற்படும் குறித்த உணவகம் சவூதிஅரேபியாவில் ரியாத் நகரில் அமைந்துள்ளதாகவும் இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment