Wednesday, March 6

கிழக்கு முஸ்லிம் சமய பெரியார்களுக்கு கோடா அழைப்பு

Gotabhaya_Rajapaksa_300[1]பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச (7.3.2013)நாளை கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமிய சமய சமூகப்பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.
இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத சமயங்களின் பேரவைத்தலைவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளருமான மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் தெரிவித்தார்.

இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய மூன்று பிரதேசங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் இதற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை ஒரு மணிக்கு பாதுகாப்பு அமைச்சுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment