செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்
துறைமுக,விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுத் திருத்தச் சட்டமூலம், பொருளாதாரச் சேவை விதிப்பனவு
திருத்தச் சட்டமூலம்
மதுவரி திருத்தச் சட்ட மூலம்,தொலைத்
தொடர்பு அறவீட்டுத் திருத்த சட்ட மூலம் ஆகியன மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அஸ்வர்
எம்.பி மேற்கண்டவாறு
தெரிவித்தார். அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
தமிழ் நாட்டில் மாணவர்கள் மத்தியில்
நஞ்சை ஊட்டுகின்றனர். அங்கு கலைஞரானாலும் கலைச் செல்வியாக இருந்தாலும் சரி அரசியலுக்காக
மாணவர்கள் மத்தியில்
நஞ்சை ஊட்ட வேண்டாமென கேட்டுக் கொள்கின்றேன். இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக தமிழ் நாட்டிலிருந்து
பலர் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு எவர் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் தமிழ் நாட்டில் இலங்கையிலிருந்து சென்ற
பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாம் இந்த தாக்குதலை கண்டிக்கின்றோம்.
இதே வேளை நாட்டைப் பிரிப்பதற்கென
சம்பந்தன்,சுரேஷ் ஆகியோர் ஜெனீவா செல்கின்றார்கள். நாட்டில் அன்று
நடந்த போராட்டம் தமிழர்களுக்காகவல்ல ஆயுதம் தாங்கியவர்களுக்காக. இந்நிலையில்
பிரபாகரனின் மகன் தொடர்பாக கதைக்கின்றனர். ஆனால் அன்று காத்தான்குடியில் தொழுகையின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக
கதைப்பதில்லை. இது தொடர்பாகவும் கதைக்க வேண்டும். அத்தோடு அரந்தலாவையில் கொல்லப்பட்ட பிக்குகள்
தொடர்பாக ஜெனீவாவில்
கதைக்க வேண்டும்.
No comments:
Post a Comment