Monday, March 25

பொது பலசேனாவின் இனவாத செயற்பாட்டை கண்டித்து மன்னாரிலும் ஹர்த்தால் (படங்கள்)

நாடு தழுவிய ரீதியில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டு வருமம் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று (25) கடையடைப்பும் ஹர்த்தாலும் இடம்பெற்று வருகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினாவதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொது பலசேனாவின் இனவாத செயற்பாட்டை கண்டித்தும் இந்த கடையடைப்பும் ஹர்த்தாலும் இடம்பெற்று வருகின்றன.

மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு முஸ்ஸிம் மக்களது வர்த்தக நிலையங்கள், சந்தைகள், அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

. முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினாவதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டித்து சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கமைவாகவே இன்று முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதேவேளை மன்னாரில் வங்கிகள், பாடசாலைகள் போன்றவை வழமை போன்று செயற்படுகின்றது. அரச தனியார் போக்குவரத்துக்களும் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் பஸார் பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். 
 
பொது பலசேனாவின் இனவாத செயற்பாட்டை கண்டித்து மன்னாரிலும் ஹர்த்தால் (படங்கள்)

No comments:

Post a Comment