அண்மையில் பாராளுமன்றத்தில் நாட்டில் எந்த
பள்ளியும் தாக்கப்படவில்லை என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்
முன்னிலையில் ஆளும் தரப்பு அறிக்கை சமர்ப்பித்தமை சுட்டிக்காட்டத்தக்கது .
அதேவளை முஸ்லிம்களுக்கு எதிராக
முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அரசு தடுக்கமையை கண்டித்தும் , அரசை
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும்
ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்
மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நாளுக்கு நாள் முஸ்லிம்
மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றன. பள்ளிவாசல்கள்
தாக்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட
சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அரசாங்கம் பார்த்துக்கொண்டு நடவடிக்கை
எடுக்காது மௌனமாக இருக்கின்றது. எனவே முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து
போராட்டத்தில் ஈடுபட போவதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment