கடந்த வழக்கு விசாரணையின் போது உயர்
நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய வீடுகளை இழக்கும் நபர்களிடம் கருத்து
பெறும் வகையில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபை
சார்பில் நீதிமன்றில் இன்று ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதன்படி குறித்த அலுவலகத்தில் மக்கள்
கருத்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறி சட்டத்தரணி அறிக்கை சமர்பித்தார்.
குறித்த பகுதியில் உள்ள 317 பேர் அங்கிருந்து விலகிச் சென்று கூலி வீட்டில்
வசிக்க விருப்பம் தெரிவித்ததாக சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்தார்.
164 பேர் வீட்டிற்கு உரிய பெறுமதியை
கோரியுள்ளதாக சட்டத்தரணி கூறினார். எனினும் வீட்டை இழக்கும் நபர்களிடம்
கருத்து பெறப்பட்டபோது அவர்கள் அச்சுறுத்தப்பட்டதாக மனுதாரர்கள் சார்பில்
ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இருந்த போதும் முன்வைக்கப்பட்ட
கருத்துக்களை பரிசீலித்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கொம்பனித்தெருவில்
குறித்த அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என அறிவித்துவிட்டார்.இந்த
நிலையில் மனு மீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. -அத தெரண
No comments:
Post a Comment