Thursday, March 28

ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமை - முஸ்லிம் சமய திணைக்களத்திடம்

ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமையை முஸ்லீம் சமய பண்பாட்டு அழுவல்கள் திணைக்களத்திற்கு வழங்குவதென சிரேஸ்ட அமைச்சர் ரத்தினசிரி விக்கிரமநாயக்க தலைமையிலான அமைச்சர் உப குழு தீர்மாணித்துள்ளது. இத்தீர்மாணத்தினை இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என சிரேஸ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.  
அரசில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களும் இந்த உப குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர். இக்குழு 4 முறைக்கு மேல் ஒன்று கூடி முஸ்லீம் அமைச்சர்கள், வியாபாரிகள், ஐம்மியத்துல் உலமா மற்றும் பௌத்தமதத் தலைவர்களை அழைத்து  சிரேஸ்ட அமைச்சர் ரத்சினசிரி விக்கிரம நாயக்கா பேச்சுவார்த்தை நடாத்தினார் 
குறிப்பாக முஸ்லீம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப்பொருள்களுக்கு அத்திவசியமாக ஹலால் சான்றிதழ் பெற்ற பின்பே ஏற்றுமதி செய்ய வேண்டி உள்ளது. இலங்கையில் வரும் முஸ்லீம் நாடுகளின் உல்லாசப் பிரயாணிகள் ஹலாலான ஹோட்டல்களையும் உணவுவகைகளையுமே வேண்டுகின்றனர்.  அத்துடன் சவுதி அரேபியா, மாலைதீவு, துபாய் கட்டார், குவைட் போற்ற நாடுகளில் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் செய்கின்றனர். அவர்கள்  தமக்குத் தேவையான உணவு மருந்துகளையும்  ஹலால் பொறித்து இருந்தால் தான் அவர்களது பொருட்கள் அந்த நாட்டில் விமாண நிலையத்தில் இருந்து விடுவிக்கப்படும். என சிங்கள நாளிதழ் ஒன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment