Sunday, March 10

ரிஷாத் பதியுதீனின் முயற்சியால் தடுத்து வைக்கப்பட்டிருந்த “தேயிலை” ஈராக்கை அடைந்தது !



13 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான, தடுத்து வைக்கப்பட்டிருந்த தேயிலைப் பொதிகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீதினின்  முயற்சியால் ஈராக்கை வந்தடைய ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேயிலை பரிசோதனை முறையில் ஈராக் புதிதாக அறிமுகப்படுத்தியிருந்த செயற்பாடுகள் காரணமாக சுமார் 100 கன்டைனர்கள் வரை முடக்கப்பட்டிருந்த நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் நேரடியாக ஈராக்கிய வர்த்தக அமைச்சரை சந்தித்துக் கலந்துரையாடி தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏற்றுமதிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இவ்வாறு முடக்கப்பட்ட தேயிலையின் மொத்தப் பெறுமதி 13 மில்லியன் டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கிற்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி தொடர்பில் நாம் அலசிப்பார்த்தபோது டில்மா நிறுவனம் சுமார் 28 நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதும் அதில் பெரும்பாலானவை மத்திய கிழக்கு நாடுகளாக இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தகத்தோடு தங்கியிருக்கும் உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஹலால் சான்றிதழ் அவசியம் என்பதும், எனவே ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுதல் தொடரக்கூடிய சாத்தியமும், துரதிஷ்டவசமாக அச்சான்றிதழை கட்டணம் இன்றி வழங்க ஜம் இயத்துல் உலமா நிர்ப்பந்திக்கப்படக்கூடும் என்பதும் இன்றைய நிலையில் எதிர்பார்க்கப்படும் விடயங்களாகும்.
- மத்திய கிழக்கு நிருபர்

No comments:

Post a Comment