பெஷன்
பக் தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி
உறுதியளித்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பெஷன் பக் களங்சியசாலை குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தை
உடனடியாக ஜனாதிபதியுடனும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ
மற்றும் பொலிஸ்மா அதிபருடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின்
கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளபேதே ஜனாதிபதி இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
பெஷன் பக் மீதான தாக்குதலை தெட்டத்தெளிவான வன்முறையென சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்ளை கண்டுபிடித்து உடனடியாக சட்டத்தின் முன் கொண்டுவருமாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறான சம்பவங்களை தொடருமாயின் இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் ஆதரவை இழக்கவேண்டி வருமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்துள்ளதுடன், இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Neeum onda saddamum
ReplyDeleteO