பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள ‘பெஷன் பக்’ (Fashion Bug) ஆடை
விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் குண்டர்கள்
தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு
மணித்தியாலத்திற்கும் மேலாக இத் தாக்குதல் நீடித்ததாகவும் சுமார் 100 பேர்
கொண்ட குண்டர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக அறியமுடிகின்றது.
இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையம் தாக்கப்படுவதற்கு முன்னர் அதற்கு முன்னுள்ள
விகாரையில் மணி அணித்து மக்களை ஒன்றுகூட்டி பெசன்பெக்கை தாக்கினார்கள் என அறியவருகிறது.
No comments:
Post a Comment