மிகப்பொறுப்பு வாய்ந்த ஒரு நேரத்தில் மிகப் பொறுப்பு வாய்ந்த ஒருவர் நேற்று இரவில் முஸ்லிம் சேவையில் முஸ்லிம் மக்களுக்காக ஆற்றிய உரை, உண்மையில் வேதனையில் இருந்த முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு மன ஆறுதலை கொடுத்தது என்பதில் மாற்று கருத்து இருக்காது. அவரது பேச்சின் நோக்கமும் அதுதான். அல்ஹம்து லில்லாஹ்.இது எமக்கு ஏற்பட்ட தோல்வியல்ல, ஹலாலை நாங்கள் இழக்கவில்லை என்று சொல்லும்போது, ஏதோ இழந்த ஒன்றை நாங்கள் மீளப்பெறுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
ஆனால், சிங்கள மக்களில் ஒரு சிலர் ஹலால் பற்றிய தெளிவின்மையால் தான் அவர்கள் இதை பிரச்சினையாக எடுத்தார்கள், எனவே நாங்கள் இந்த ஹலால் விடையத்தை அவர்களுக்கு இன்னும் விளங்கப்படுத்தி அவர்கள் புரிந்து கொள்ளும்போது பிரச்சினை இருக்காது என்றார். இலங்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும், பொது பல சேனா ஹலாலை பற்றி விளங்காததால் பிரச்சினை ஏற்படுத்தவில்லை. அவர்களது நோக்கம் என்ன, ஏன் பிரச்சினைக்கு வருகிறார்கள் என்று எல்லோரும் அறிவார்கள். எனவே அவர்கள் விளக்கமின்மையால்தான் பிரச்சினைக்கு வருகிறார்கள் என்று சொல்வது பொருத்தமற்றது. தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.பொது பல சேனா வேண்டுமென்றே பிரச்சினைக்கு வருகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
அடுத்து, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை பற்றி பேசினார். முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் என்ற முடிவு நடைமுறைச்சாத்தியமற்றது , எனவே அதை கைவிட்டோம் என்றார். உண்மையான் விடயம்தான், என்றாலும், ஒரு முதிர்ச்சியடைந்த உலமா சபை என்ற வகையில் இவ்வாறான விடையங்களை அலசி ஆராய்ந்த பின் அவ்வாறான முடிவுகளை எடுத்திருக்கலாம். இது நடைமுறை சாத்தியமற்றது என்று அறிவித்த அன்றே சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட சதி என்பதை நாம் அறிவோம்; இது இன்னும் தொடரும் என்று பொது பல சேனா நேற்றே அறிவித்திருந்தது. எனவே எதிர்காலத்தில் ஹிஜாப், இஸ்லாமிய வங்கி போன்ற விடையங்களில் பொது பல சேனா கை வைத்தால் உலமா சபை எவ்வாறான முடிவை எடுக்கும் என்பது சம்மந்தமாக ரிஸ்வி முப்தி அவர்கள் ஒரு வார்த்தையாவது பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்கு இருந்தது.
இறுதியில் முக்கியமான விடையமொன்ரை சொன்னார். நாம் நமது சகோதர இனத்துடன் நன்றாக பழகுகிறோமே தவிர இஸ்லாத்தை பற்றி என்றுமே சொன்னதில்லை, அதன் விளைவுதான் இது, எனவே இனிமேல் நாங்கள் சகோதர இனத்துக்கும் எமது இஸ்லாத்தை எத்தி வைப்போம் என்று வேண்டிக்கொண்டார். உண்மையிலேயே தாமதமாக முஸ்லிம்களுக்கு புரிந்த ஒரு விடையம்தான் இது, நாம் விட்ட தவறுகளை புரிந்து கொண்டு இனி நாம் சக வாழ்வை நோக்கிய பயணத்தை தொடர அல்லாஹ் உதவி செய்வானாக! எமது ஹலால் சம்மந்தமான முடிவில் அல்லாஹ் எமக்கு வெற்றியை தருவானாக
****ஜலீல்
s
ReplyDeleteஅட நீங்க சேர், இஸ்லாமிய சரியா சட்டதிர்க்கே இடமில்லை என்று போதுபலசென சூளுரைசிரிக்கிறது. இது உங்களுக்கு தெரியாத சேர்? இப்படி இருக்கேகுள்ளே நாம பிரச்சாரம்செய்ய பொய் பிடிச்சி உள்ளே போடமாட்டனுகள் எண்டு என்ன சேர் உத்தரவாதம்
ReplyDelete