
பௌத்தசிங்கள கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை
மேற்கொள்ள முஸ்லிம்கள் தயாராகிவருதாக அறியவருகிறது. இதனை முஸ்லிம்
கவுன்சிலின் முக்கிய பிரமுகர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு
கூறினார்.
கண்டியில் அண்மையில் நடைபெற்ற பொதுபல சேனா நிகழ்வொன்றில், முஸ்லிம்கள்
மாற்று மதத்தினருக்கு சாப்பாடு கொடுக்கும் போது துப்பிவிட்டுத்தான் அந்த
சாப்பாட்டை வழங்குவதாகவும், இதுபற்றி அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாகவும்
பொதுபல சேனா பகிரங்கமாக பொய்யுரைத்தது.
பொதுபல சேனா இதன்மூலம் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும், மாற்றுமதத்தவர்கள்
மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய சந்தேகங்களை வளர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டே
பொதுபல சேனாக்கு எதிராக முஸ்லிம்கள் நீதிமன்றத்தை நாட
திர்மானித்துள்ளனர். இதுபற்றி ஆராய்ந்துள்ளதாகவும், விரைவில் தீர்க்கமான
முடிவவொன்று மேற்கொள்ளபடவுள்ளதாகவும் மேலும் அறியவருகிறது.
No comments:
Post a Comment