Friday, March 22

ஆஸாத் சாலி மீதான முறைப்பாட்டை வாபஸ் பெறுங்கள் - முஸ்லிம்கள் வலியுறுத்து



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஹசன் மௌலானா ஆஸாத் சாலி மீது சீ.ஐ.டி. மேற்கொண்ட முறைப்பாடுகளை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமென முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து  மேலும் அறியவருவதாவது,
இன்று வெள்ளிக்கிழமை, 22 ஆம் திகதி தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் ஹசன் மௌலானாவை சந்தித்துள்ள சில முஸ்லிம் சட்டத்தரணிகளும், முஸ்லிம் பிரமுகர்களும், ஆஸாத் சாலி மீதான முறைப்பாடுகளை ஹசன் மௌலானா உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து ஆஸாத் சாலிக்கு எதிரான 5 முறைப்பாடுகளில் சிலவற்றை வாபஸ் பெற்றுக்கொள்ள ஹசன் மௌலானா இணக்கம் வெளியிட்டதாக குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் மூலமாகவும், மற்றும் சில நம்பகரமான விட்டாரங்களிலிருந்தும் அறியவருகிறது.

No comments:

Post a Comment