மதீனாவில் மிக விரைவில் குர்ஆன் நூதனக்
கண்காட்சியகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல்
திணைக்களங்களின் தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிக்குக் கை கொடுக்கும் முகமாக
சுமார் 511 வருடங்கள் பழமை வாய்ந்த குர் ஆன் பிரதியொன்றினை ஜித்தா
தொழிலதிபர் அப்துல் மக்சூத் என்பார் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சவுதியில் இவ்வாறு பழமை வாய்ந்த பல
பிரதிகள் இருப்பதாகவும் அவை வீடுகளில் வைத்துப் பாதுகாக்கப்படுவதை விட பொது
மக்களும் பார்வையிடக்கூடிய வகையில் இவ்வாறான நிலையங்களில் இருப்பது
சிறப்பானது எனவும் அவர் தன் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இம் முயற்சி கை கூடுமெனின் உலகிலேயே முதலாவது குர்ஆன் தொல்பொருட் காட்சியகமாக இது அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- மத்திய கிழக்கு நிருபர்
No comments:
Post a Comment