
கண்டி மாநகரில் பல தசாப்தங்கள் இயங்கி வந்த மாடு அறுக்கும் மடுவம் மாநகர சபை தீர்மானப்படி நிரந்தரமாக மூடப்படவுள்ளது. இந்த நடவடிக்கையால் இதன் பின் கண்டி நகர எல்லைக்குள் மாடுகளை ஆடுகளை அறுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்டி கட்டுக்கண் பிரதேசத்தில் ஆடு, மாடு, கோழி போன்றன இந்த மடுவத்தில் அறுக்கப்பட்டு வந்தது.
கண்டி மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரும் முன்னாள் தியவடன நிலமேயுமான நிரஞ்சன் வியஜரதின கொண்டு வந்த பிரேரணையின் அடிப்படையில் வாக்கெடுப்பின் பின் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மாநகர சபையில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் இப் பிரேரணையை வன்மையாக எதிர்த்து வாக்கெடுப்பின் பின் நிறைவேறியது.

No comments:
Post a Comment