Tuesday, March 5

ஹலால் சான்றிதழ் வழங்கும் பணி தொடர்கிறது: ACJU

ஹலால் சான்றிதழ்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு பல நிறுவனங்களுக்கு சில குழுக்களால் அழுத்தம் கொடுக்கப்படுகின்ற போதிலும் ஹலால் சான்றிதழ் வழங்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக ஹலால் பிரிவின் செயலாளர் மெளலவி முர்ஷித் முளப்பர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சில நிறுவனங்கள் தம்மிடம் முறையிட்டுள்ளதாகவும் எனினும் இது ஒரு அரச மட்டத்தில் ஆராயப்படும் பிரச்சினை என்பதால் அரசுடன் கலந்துரையாடி அதற்கு தீர்வு காண்பதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நாம் தற்போதும் மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பில் தீர்மானம் எடுக்க அரசால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முடிவிற்கு நாம் கட்டுப்பட்டு செயற்பட தயாராகவே உள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment