Tuesday, March 19

இலங்கையில் 3418 பேர் வீதிகளில் வாழ்கின்றனர்: புள்ளிவிபர திணைக்களம்

இலங்கையில் 3418 பேர் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வீதிகளில் வாழ்வதாக அரசாங்க புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தரவானது 2012 ஆம் ஆண்டு பெறப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் வீட்டுக்கணக்கெடுப்பின் பிரகாரம் பெறப்பட்டதாக   சனத்தொகை  கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின், சனத்தொகை மற்றும் சனத்தொகை ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் இந்து பண்டார தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின்  பணிகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்துனம் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

 வீடற்றவர்கள் தொடர்பிலான தரவுகள் புள்ளிவிபர திணைக்களத்தின் மாகாண அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் இலங்கயின் மொத்த சனத்தொகை 20263723 ஆகும். இதன்படி ஒரு சதுர கிலோமீற்றருக்கு சனத்தொகை அடர்த்தியானது 323 ஆகும்.

எனினும் கொழும்பு பிரதேசத்தை பொறுத்தவரை அவ்வடர்த்தியானது 3438 ஆகும். இதுவே நாட்டின் கூடிய சனத்தொகை அடர்த்தி கொண்ட பிரதேசமாகும். மிகக்குறைந்த சனத்தொகை அடர்த்தி கொண்ட பிரதேசமாக முல்லைத்தீவு (38) பிரதேசம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment