உலகிலேயே
அதிக வயதான நபர் என்ற சாதனை படைத்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த 154 வயதான
நபர் இந்த வாரம் மரணமடைந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.நான்கு வருடங்களுக்கு முன்னர் அதிக வயதான நபர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த மொஹம்மட் பின் ஷாரி இந்த வாரம் சவூதி அரேபியாவில் மரணமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சவுதியிலுள்ள நமாஸ் நகருக்கு அருகில் சத்ர் அயாட் என்ற கிராமத்திலுள்ள வைத்தியசாலையிலேயே இந்நபர் உயிரிழந்துள்ளார்.
மொஹம்மட் பின் ஷாரியின் மகன், பேரன் கொள்ளுப் பேரன் என அவரது குடும்பத்தில் 180 பேர் உயிரிழந்ததற்குப் பின்னரே இவர் உயிரிழந்துள்ளார். 10 மனைவிகளைக் கொண்டிருந்தார் மொஹம்மட் பின் ஷாரி. மனைவிமார் அத்தனை பேரும் உயிரிழந்தன் பின்னர் தனது 150ஆவது வயதில் மீண்டுமொரு திருமணம் செய்ய மொஹம்மட் பின் ஷாரி எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சவுதி ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக வந்த மொஹம்மட் பின் ஷாரி அப்போது கருத்துத் தெரிவிக்கையில், நான் இப்போதும் ஆரோக்கியமாகவே உள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். மேலும் அந்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் இவரை வாந 'னநயn ழக உநவெநயெசயைn' எனக் கூறினார்.
மொஹம்மட் பின் ஷாரி தனது 150ஆவது வயதில் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே அதிக வயதான நபர் என பதிவானமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment