மீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும்
காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள்
மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது “மீள்குடியேற்றமே’ தவிர
‘மீள்குடியமர்த்தல்” அல்ல என வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி
செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
இவர்கள் வெலிஓயா, பதவியா மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளிலேயே மீள்குடியேற்றப்பட்டவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள
சிங்கவர்களுக்காக 850 வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்கவுள்ளது என
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்தார்.
No comments:
Post a Comment