தமது நாட்டின் கடல்சார் நடவடிக்கைகளுக்கு இலங்கையின் கடற்பரப்பையும் தாம்
பயன்படுத்திவருவதாக ஈரானின் கடற்படை தளபதி அட்மிரல் ஹபீபுல்லாஹ் சய்யாரி
தெரிவித்துள்ளார்.
அத்துடன் சூடான்,ஜெடா,ஜிபோர்டி மற்றும் லெடகியா ஆகிய துறைமுகங்களை
பயன்படுத்துவதற்கு ஈரான் உடன்பட்டுள்ளதாகவும் ஏனைய எந்தவொரு நாட்டினதும்
சர்வதேச கடற்பரப்பை பயன்படுத்த ஈரானுக்கு உரிமை உள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
ஈரான் தொடர்பில் அமெரிக்க மற்றும் மேற்கத்தேய நாடுகள் அனுவிவகாரத்தை
காரணம் காட்டி பொருளாதார தடைகள் பலவற்றை விதித்துள்ள நிலையில் ஈரான்
கடற்படையின் இந்த அறிவிப்பு தொடர்பில் அவை மேலும் விசனமடையோலாம் என அரசியல்
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
No comments:
Post a Comment