Tuesday, February 5

குழந்தையை வதைத்து கொன்ற கொலையாளியான தந்தைக்கு விடுதலை !!?


1 சவூதி அரேபியாவின் தனது ஐந்து வயது மகளை மிக மோசமான முறையில்  துன்புறுத்தியதால் பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டு எட்டு மாதங்களின் பின்னர் வபாத்தான   குழந்தையின் தந்தையான      ‘முன்னாள் போதைவஸ்து அடிமை’  பயால்  அல் ஹம்தி என்பவருக்கு  வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் சவூதியில் கண்டங்கள்   எழுத்துள்ளது.
பயால்  அல் கம்தி தனது முன்னால் மனைவிக்கு பிறந்த தனது ஐந்து வயது பெண்குழந்தையை  மிக மோசமான முறையில் தண்டனை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது .  அவர் தான் தனது குழந்தையை பிரம்பு ,மற்றும் வயர்  மூலம் தண்டித்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார் . அதேவேளை அவர் தனது மகளை ‘மருத்துவ கற்பு சோதனைக்கு ‘ virginity test உட்படுத்தியதாக அவரின் முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார் .
1
பயால் அல்ஹம்தி


 
அவரின் ஐந்து வயது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டபோது அவள்  பாலியல் வதைகளுக்கு உட்படுத்தப் பட்டு இருந்ததாகவும்  அவளது இடது கையில் எலும்பு முறிவும், கை விரல்களில் ஒன்றிலிருந்து ஒரு நகம் சேதமான தலையில் மண்டையோட்டு பகுதியில் உடைவும்  இருந்ததாக அந்த வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக ஊடக தகவல்கள் தெரிவிகின்றன .
வெளிநாட்டு ஆங்கில ஊடகங்களில் பயால்  அல் ஹம்தி  ஒரு பிரபல்யமான இஸ்லாமிய போதகர் என்றும் இவர் சவூதியில் பல தொலைகாட்சி நிகழ்சிகளில் அடிக்கடி தோன்றி இஸ்லாமிய நிகழ்சிகள் வழங்குவதாகவும் தெரிவிக்கின்றன. அதேவேளை இவர் ஒரு மார்க்க போதகர் அல்ல இவரின் பெயர் அங்கீகரிக்கப்பட்ட அரச திணைக்களத்தில் இல்லை என்று சவூதி அரசு மறுத்துள்ளது. அதேவேளை    சவூதியில் உள்நாட்டில்  இயங்கும் Muslim television networks- என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் இஸ்லாம் தொடர்பிலான நிகழ்சிகளில் கலந்துகொண்டுள்ளார் .
நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த குற்றத்துக்கு  ஈடாக குருதிப் பணத்தை தனது முன்னாள் மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை பெறமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனினும் 30 திங்களுக்குள் அவரின் முன்னாள் மனைவியும் குழந்தையின் தாயுமான நபர் மேல்முறையீடு செய்யமுடியும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது .  தீர்ப்பை கண்டித்து மனித உரிமை செயல்பாட்டாளர்கள்  கண்டனங்களை   தெரிவித்து வருகிறனர்.
3
லாமியா அல்ஹம்தி
ஐந்து வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசம்பர் மாதம் 25, ஆம் திகதி 2011ஆம் ஆண்டு  பல்வகை காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆண்டு  (2012) ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி வபாத்தானது . இதை தொடர்ந்து  பயால்  அல் ஹம்தி,  லாமியா அல் கம்தியின் துன்புறுத்தல்களுக்கு காரணமானவர் என்று விசாரணைகளின் மூலம் அறிந்தவுடன் சவூதி அராபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சவூதியில் அமுலில் இருக்கும் நீதியின் பிரகாரம் தனது பாதுகாப்பில் இருக்கும் குழந்தையை அல்லது மனைவியைக் கொலை செய்யும் குற்றத்துக்கு தண்டனையாக மரண தண்டனையை தந்தைக்கு அல்லது கணவனுக்கு தீர்ப்பாக வழங்க முடியாது என்று மேற்கு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இக்கொலைக்கு நட்டஈடாக சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை கொலையாளி  செலுத்த உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
Lama al-Ghamdi2
லாமியா அல்ஹம்தி

No comments:

Post a Comment