ஈரானில் உள்ள கடைகளில், புத்தர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பார்பி பொம்மை, மேற்கத்திய பாணி சிலைகள், பல ஆண்டுகளாக
தடைசெய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் தற்போது அந்நாட்டில் புத்தர் சிலை
விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பெளத்த மதம் பரவுவதை தடுக்கும்
நடவடிக்கையாக, அந்நாட்டின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர்
சிலைகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
"புத்தர் சிலைகள் விற்கப்படுவது, கலாச்சார அத்துமீறல்' என, அந்நாட்டு
கலாச்சார பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment