Tuesday, February 5

விண்வெளிக்கு மனிதனை அனுப்ப தயாராகும் ஈரான்


Iran-space-program-300x224தாம் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப தயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஈரான் அண்மைக் காலமாக விண்வெளி ஆய்விலும் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈரான் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. சமீபத்தில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் போர் விமானம் தயாரித்தது. அணுமின் உற்பத்தியிலும் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மறைமுகமாக அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
 
அது ஒருபுறம் இருக்க விண்வெளி ஆய்விலும் ஈரான் ஈடுபட்டுள்ளது. வருகிற 2020-ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக ஒரு குரங்கை ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி அது மீண்டும் பூமிக்கு திரும்பி வந்தது. இந்த சாதனை கடந்த வாரம் நிகழ்த்தப்பட்டது.
இதுகுறித்து அதிபர் முகமது அகமதினேஜாத் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, வருகிற 2020-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு முன்னோடியாக குரங்கை அனுப்பி வெற்றி பெற்றுள்ளோம்.
இத்திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஈரான் தயாராக உள்ளது. தொடர்ந்து அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment